போதைப்பொருள் வர்த்தகரான பொடி லெசியின் உதவியாளர் ஒருவர் அகுங்கல்ல பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்று, தொலைபேசி மற்றும் மேமாட்டார் வாகனங்களின் இலக்கத்தகடுகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை துப்பாக்கிகளுடன் மேலும் இரு சந்தேக நபர்கள் யட்டியாந்தோட்ட மற்றும் விநாயகபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.