(மினுவாங்கொடை நிருபர் )
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியன, பல சிவில் சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து, கூட்டு முன்மொழிவு ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நீதி அமைச்சின் பொதுமக்கள் முன்மொழிவுகளுக்கு பதில் அளிக்கும் முகமாக, துறை சார்ந்தோரின் வழிகாட்டுதல்களுடன் இக்கூட்டு முன்மொழிவு உருவாக்கப்படவுள்ளது.
அத்துடன், புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிடம் இக்கூட்டு முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள்,
01) தேசத்தின் இயல்பு
02) தேசத்தின் கொள்கைகளை வழி நடத்தும் கோட்பாடுகள்
03) அடிப்படை உரிமைகள்
04) மொழி
05) நிறைவேற்றுத் துறை (ஜனாதிபதி/அமைச்சரவை/பொதுச்சேவை)
06) சட்டவாக்கம்
07) பொதுமக்கள் கருத்துக் கோரல் உட்பட வாக்குரிமை மற்றும் தேர்தல்கள்
08) அதிகாரப் பரவலாக்கம்/அதிகாரப் பகிர்வு/வலுவேறாக்கம்
09) நீதித்துறை
10) பொது நிதி
11) பொதுமக்கள் பாதுகாப்பு
12) மேலே பிரத்தியேகமாகக் குறிப்பிடப்படாத வேறு ஆர்வமுள்ள பகுதிகள்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் ஒரு கூட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கத் திட்டமிடுகின்றோம். இந்தச் செயன்முறையில் அனைவரினது பங்களிப்பும் வரவேற்கத்தக்கதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை சார்பில், பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம்.ரிஸ்மி தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆலோசனைகளையும், முன்மொழிவுகளையும், constitutionproposal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறும், இது தொடர்பில் ஆர்வமுள்ளோர்களிடமும் பொதுமக்களிடமும் தேசியத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK