இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 90 வீத கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான புதிய தகவல் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, November 1, 2020

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 90 வீத கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான புதிய தகவல்


இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் 90 வீதமானவர்கள் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் வகையை விடவும் தற்போதைய வைரஸ் வித்தியாசமானதாகும்.

இந்த வைரஸ் நினைப்பதனை விடவும் வேகமாக இன்னும் ஒருவருக்கு தொற்ற கூடிய வாய்ப்புகள் உள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செயற்படுத்திய காலத்தினுள் சில நோய் அறிகுறிகள் காணப்பட்டால், 0117966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment