பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் 2021 வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதம் ஏழாவது நாளாக இடம்பெறவுள்ளது.

இதன்போது, சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய ஊக்குவிப்பு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு மற்றும் மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்தல் ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)