தனிமைப்படுத்தல் கட்டளைக்கு மாறாக செயல்படுபவர்கள் அல்லது உண்மையான தகவல்களை மறைத்து சில ஆவணங்களில் தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் மீது தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரும் தங்களின் தகவல்களைப் போலியாக பதிவு செய்தால் அது ஆவணங்களை மோசடி செய்யும் குற்றத்திற்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் குற்றவியல் பிரிவு 399 இன் படி, போலியான தகவல்களை வழங்கி தவறான தகவல்களை பதிவு செய்தால் அத்தகைய நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என கூறியுள்ளார்.