இலங்கையில் 22வது கொரோனா மரணம் பற்றி இன்றைய தினம் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது.
பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை கண்டறியப்பட்டது.
முன்னதாக இலங்கையில் 22ம் கொரோனா தொற்று மரணம் பதிவானதாக சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
எனினும் தற்பொழுது இந்த தீர்மானத்தை திருத்திக் கொள்வதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பதிவானதாக முன்னர் அறிவிக்கப்பட்ட 22 ஆவது கொரோனா தொற்று மரணம் பற்றிய அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், 22 ஆவது மரணமாக அதனை கருதுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவரையில் 21 ஆக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin