(எம்.மனோசித்ரா)

முல்லேரியா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் பழுதடைந்த பிரதான பி.சி.ஆர். மாதிரிகளை பரிசோதிக்கும் இயந்திரத்தை திருத்துவதற்காக  சீன தொழில்நுட்ப குழு  நேற்று (30) இரவு  நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கையிலுள்ள சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் உடனடி வேண்டுகோளுக்கமைய பி.சி.ஆர். சோதனைக் கருவிகள் உற்பத்தி நிறுவனத்திலுள்ள தொழில்நுட்பவியலாளர்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குறித்த இயந்திரம் பழுதடைந்ததையடுத்து சுமார் 20,000 மாதிரிகளின் முடிவுகள் தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.