20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக அரசாங்கத்திடமிருந்து எதனையும் எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே தெரிவித்துள்ளார்.

சிலர் நான் பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர், ஆனால் நாங்கள் ஒரு சதம் கூட அரசாங்கத்திடமிருந்து பெறவில்லை,வலுவான ஜனாதிபதியே நாட்டிற்கு அவசியம் என்பதாலேயே நான் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பெருமளவு பணத்தை செலவழித்து ஜனாதிபதியை தெரிவு செய்த பின்னர் அவரது கைகளை கட்டி ஏன் கடலில் வீசவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே நீடிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.