பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு கையளிக்கப்பட்ட குற்றப்பத்திரம்


ராஜகிரியாவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இன்று முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

2016, பெப்ரவரி 28ஆம் திகதியன்று அமைச்சர் பயணித்த வாகனம் ராஜகிரியவில் உந்துருளி ஒன்றுடன் மீது மோதி உந்துருளியில் பயணித்தவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின்போது முன்னாள் அமைச்சர் வாகனத்தை செலுத்தவில்லை என்றும் அவரின் சாரதியே வாகனத்தை செலுத்தியதாக முன்னதாக வெலிக்கடை காவல்துறையில் முறையிடப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.

இதன் பின்னரே சட்டமா அதிபர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

இந் நிலையில் இன்று மேல்நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல பிரதிவாதியை ரூ .10,000 ரொக்க பிணையிலும், தலா ரூ .100,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

இந்த வழக்கு தொடர்பான சாட்சிய விசாரணைகள் எதிர்வரும் 2021 மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin