யானை தாக்கி பெண்ணொருவர் மரணம்.


(அப்துல்சலாம் யாசீம்)

அனுராதபுரம் மாவட்டம்- கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால்  பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் கஹட்டகஸ்திகிலிய-மீமின்னாவல ,இஹலகம பகுதியைச் சேர்ந்த சுத்தாகே விமலாவத்தி (64வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது வீட்டுக்குஸஅருகில் சத்தம் கேட்டதையடுத்து கதவைத் திறந்து வெளியே செல்ல முற்பட்டபோது முன்னால் நின்ற யானை தூக்கி வீசியதாகவும் அதனை அடுத்து அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்தில் இருப்பதாகவும் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் கஹடகஸ்திகிலிய பொலிசார் தெரிவித்தனர்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK