விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உத்தரவிற்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.