களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா


களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினுவங்கொட பகுதியை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை மினுவங்கொட கைத்தொழிற்சாலையின் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நாளை (12) தீர்மானிக்கப்பட உள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

அதுவரையில் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK