பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்த பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை துறைமுகத்தில் இருந்து பேலியகொடை மீன்சந்தை வரை சென்ற சிற்றுந்து ஒன்றின் சாரதிக்கும் அவருடன் தொடர்பை பேணியவர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.