முஷாரப் எம்பி வெளிநடப்பு; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி.


நேற்று  இடம்பெற்ற எதிர்க்கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்திற்கு எதிர்க்கட்சியின் அழைப்பின் பேரில் SMM. முஷாரப் MP அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்

அவர்களிடம் 20A இன் 17ஆம் சரத்தின் மீதான ஆதரவு குறித்த மரிக்கார் MP அவர்கள் ஆக்ரோஷமான கேள்வி தொடுத்தார்.

இதற்குப் பதிலளித்த முசாரப் MP அவர்கள் 20A இன் 57 சரத்துகளிலும் எதிர்கட்சி எதிர்க்காத பல சரத்துக்களை முன்வைத்து அது தொடர்பான எதிர்க்கட்சியின் நிலைப்பாடு குறித்து எதிர்கேள்வி தொடுத்தார்.

இதன் போது இடம்பெற்ற காரசாரமான கருத்தாடல்களைத் தொடர்ந்து முஷாரப் MP அவர்கள் நான் SJB உறுப்பினர் அல்ல. எதிரணிக்கு ஆதரவளிக்கும் மாற்றுக்கட்சியின் ஒரு உறுப்பினர் என்று கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

அவரின் வெளிநடப்பைத் தொடர்ந்து எதிர்கட்சியின் மூத்த உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ண மற்றும் ஹர்ஷ டீ சில்வா ஆகியோர் ஆக்ரோஷமாக செயற்பட்ட தமது கட்சி உறுப்பினர்கள் மீது தங்கள் அதிருப்தியை வெளிட்டனர்.

20 ஆம் திருத்தத்திற்கு ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்ற தீர்மானமாக இருக்கலாம், வேறெந்த தீர்மானமுமாக இருக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியே தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட எனது கட்சியாகும். எனது கட்சியின் தீர்மானத்தின் படி 20ஆம் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தேன். 

நடைபெற்ற 3 வாக்கெடுப்புகளில் 20 ஆம் திருத்தத்துக்கான 1 ஆம் 3 ஆம் வாக்கெடுப்பில் எதிர்த்தே எனது வாக்கினை அளித்தேன். 20ஆம் திருத்தத்தின் 57 பிரிவுகளில் ஒவ்வொன்றாக வாக்கெடுப்பு நடந்த போது 17 ஆம் பிரிவான இரட்டை பிரஜா உரிமைக்கான வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களித்தேன். 

20 ஆம் திருத்தத்தின் 57 பிரிவுகளையும் ஐ. ம. சக்தி எதிர்க்கவில்லை. சில பிரிவுகளுக்கு நடுநிலை வகித்தார்கள். இவ்வாறான சூழலில் 17 ஆம் பிரிவான இரட்டை பிரஜா உரிமை தொடர்பான விடயத்துக்கு திறந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சி கோரிய போது எதிர்பாராத இவ்வாக்கெடுப்பு அறிவிப்பினால் நான் தனித்து முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் போது பின்வரும் காரணங்களை முன்னிறுத்தி நான் எனது ஆதரவை வழங்கினேன். 

1. இனவாதிகளான விமல், கம்மன்பிலவை விட இனவாதமற்ற பசில் ராஜபக்சவின் வருகையில் அதிகம் தவறிருக்காது. 2. இரட்டை பிரஜா உரிமையில் சிறுபான்மைக்கு பாதிப்பில்லை. 3. நல்ல முன் மாதிரிகளை கொண்ட 19ஆம் திருத்தத்தில் இடம்பெற்ற அரசியல் நோக்கம் கொண்ட தீர்மானங்களில் (ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சி பீடம் ஏறாமல் தடுக்கும் ) ஒன்றுதான் இரட்டை பிரஜாவுரிமை உடையோர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இட முடியாது என்ற தடை. இதனை 20இல் மாற்றுவதன் மூலம் பழைய 1978ஆம் ஆண்டின் யாப்பு நிலைக்கு செல்லுமே அல்லாமல் இதில் எந்த அதிகார அதிகரிப்பும் ஏற்பட போவதில்லை. 4. 20இன் பின்னர் தொடர்ந்தும் இப்பிரிவு தேவையில்லை என்பதால், இதனை புதிய யாப்பினூடாக ஒழிப்பதாக (இல்லையென்றால் இன்னுமொரு திருத்தத்தினூடாக ) சொன்ன ஜனாதிபதியின் வார்த்தையை நம்பலாம். 

மேற்கூறிய காரணங்களால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் தனிப்பெரும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு தீர்மானம் எடுக்க உரிமை இல்லை என SJB நினைக்குமாக இருந்தால், அந்த SJB ஓடு இணைந்து பயணிக்கும் எந்த தேவையும் எனக்கு இல்லை என்பதிலும், ACMC இல் போட்டி இட்டு வெற்றி ஈட்டியவன் என்ற வகையில் பாராளுமன்றில் சுயாதீனமாக எதிர் தரப்பில் இயங்குவது சுதந்திரமும், கௌரவமும் மிக்கது என்பதிலும் திருப்தியுற்றவனாக அந்த SJB குழுக்கூட்டத்தில் இருந்து வெளியேறினேன். குறிப்பு : சமர்ப்பிக்கப்பட்ட 57 பிரிவுகளுள் SJB யினர் no என்பதனை No என்பதற்கும் Abstain என்பதை Abstain என்பதற்கும் நான் ஒன்றும் Robot இல்லை.என்று தெரிவித்தார் 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK