முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இன்று(6) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.
இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள் வாகன உரிமையாளர்கள் பேரூந்தில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதே வேளை வீதியில் முகக்கவசம் இன்றி பயணித்தவர்கள் நிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு பணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வைத்தியசாலை வங்கிகள் அரச திணைக்களங்கள் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுநிறுவனங்களில் தேவை நிமிர்த்தம் செல்லும் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிந்து வருமாறு மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK