கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணி குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 2023ம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப்பணிகள் 2017ம் ஆண்டு நிறைவுசெய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் இதன் மூலம் ஆண்டுக்கு ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post