கொவிட் பரவல் - கொழும்பில் சீல் வைக்கப்பட்ட உணவகங்கள்


பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகங்கள் இரண்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் குறித்த உணவகங்களில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் குறித்த உணவகங்களில்  இருந்து உணவுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக மாநகரசபை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக குறித்த நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் விடுதி ஒன்றில் இருந்த நபர்களும் PCR பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post