கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கடிதங்களின் பிரதிகள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இக்கடிதங்களில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிண்ணியா தள வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இலங்கையின் வேறு எந்த வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படாத இந்த நேரக்குறைப்பை நிறுத்தி வழமைபோன்று வெளிநோயளர் பிரிவு செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல நடுஊற்று வைத்தியசாலையில் கடந்த 1 மாத காலமாக வைத்தியர் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் இவ்வைத்தியசாலையை சூழவுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வைத்திய சேவைக்காக மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் இவ்வைத்தியசாலைக்கு பகுதி நேர அடிப்படையிலாவது வைத்தியர் ஒருவர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறே நடுத்தீவு வைத்தியசாலைக்கும் நிரந்தர வைத்திய நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK