பிடிவிராந்து இன்றி கைது செய்யப்படுவீர்கள்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Tuesday, October 27, 2020

பிடிவிராந்து இன்றி கைது செய்யப்படுவீர்கள்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிபவர்களை பிடிவிராந்து இன்றி கைது செய்வோம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள ஓர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டை வெளியேறினாலோ அல்லது அந்த வீட்டுக்கு எவரேனும் பிரவேசித்தாலோ பிடிவிராந்து இன்றி கைது செய்யப்படுவார்கள்.


எவ்வாறெனினும், வீட்டில் இருப்பவர்கள் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவையென்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும் அவ்வாறு செய்யும் போது உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


குடும்பம் ஒன்று வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது இதுவரையில் ஒட்டப்பட்ட துண்டுப் பிரசூரத்திற்கு மேலதிகமாக வேறும் ஒர் துண்டுப் பிரசுரமும் ஒட்டப்பட உள்ளது.


இந்த புதிய துண்டுப் பிரசுரத்தில் பிரதேச பொலிஸ் நிலைய தொடர்பு இலக்கம், சுகாதார பரிசோதகரின் தொடர்பு இலக்கம், மாவட்டச் செயலகத்தின் தொடர்பு இலக்கம் என்பன குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment