ஆசிரியர்கள் மாணவர்களின் திறமைகளை கண்டு கொள்கிறார்களா?

 


சில்மியா யூசுப்

ஒரு நல்ல ஆசான் ஒரு மாணவனுக்கு கிடைத்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

பிள்ளைகளுக்கு திறமை இல்லை இந்தப்பிள்ளையால் எதையும் சாதிக்க முடியாது என நீங்களே முடிவெடுத்து விடவேண்டாம்.

ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு .

அந்த திறமைகள் தான் அவர்களிடம் ஒழிந்து கிடக்கின்றன.

அந்த திறமைகளுக்கான கலத்தை நாம் தான் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

 இல்லேயேல் அவர்களின் திறமைகள் அவர்களோடேயே ஒழிந்து போய்விடும்.

ஆசிரியர்களாகிய ஒவ்வொருவரும் தன் சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு ஆசானிலிருந்து தான் அனைத்து திறமையான மாணவர்களும் உருவாகுகின்றார்கள்.

ஒரு நாட்டுக்கு நல்ல பிரஜை  ஒரு நல்ல ஆசானிலிருந்து தான் துவங்குகிறது.

ஒரு நல்ல ஆசான் பிள்ளைகளுக்கு நல்லதையே கற்றுக்கொடுப்பார், பிள்ளைகளின் விடயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார், அவர்களின் இலட்சியத்தியத்தில் அக்கரை காட்டுவார், மாணவர்களுக்குள் ஒழிந்து கிடக்கும் திறமைகளை வெளிகாட்ட  பக்கபலமாக இருப்பார்.

பிள்ளைகள் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு கற்பித்து கொடுப்பதில் ஆர்வமானவராக இருப்பார்.

இது தான் ஒரு நல்ல ஆசானின் குணம்.

இதில் எத்தனை ஆசான்கள் உண்மையான ஆசான்களாய் இருக்கின்றீர்கள் என நீங்களே  சிந்தித்து பாருங்கள்..

அந்தவகையில்

ஆசிரியர்களின் சிலர் சுயநலவாதியாக செயற்படுகின்றார் என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும்

 அனைவரும் சமம் என்ற ஒத்துமைகள் அவர்களிடம் காணப்படுவது அரிதாக இருக்கிறது.

வசதியான பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்கள், ஆனால் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த பிள்ளையை சில வேளை கவணிக்காமலே விட்டு விடுகின்றார்கள்..

பிள்ளைகளிடம் ஒரு ஆசான் எடுத்தெரிந்து மனம் நோகும் படி பேசவோ அதிகம் தண்டிக்கவோ கூடாது.

ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தைகளினது உளவியளை புரிந்து கொண்டு அவர்களோடு அன்பாக கதைத்து நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

சில ஆசான்கள்  மாணவர்களுக்குள் இருக்கும் திறனை கண்டு கொள்வதும் இல்லை, அவர்களை ஊக்கப்படுத்துவதுமில்லை,  சில சமயங்களில் அவர்களால் ஒன்றுமே முடியாது என கைவிட்டு விடுகின்றார்கள்.

இருதியில் சில ஆசான்களின் கவனயீனத்தால் எதிர்கால மொட்டுக்களின் இலட்சியமும் ஒழிந்து போகின்றது.

 பலரோடு போட்டியிட்டு ஆசிரியர் என்ற பதவி

உங்களுக்கு கிடைத்துள்ளது, மாதாந்தம் சம்பளம் வருகிறது.

இதனை நினைத்து சந்தோசப்படுங்கள்.

போட்டியாளர்களில் உங்களை வெற்றியாளராக்கி ஆசான் என்ற பதவியை உங்களுக்கு இறைவன் வழங்கி உள்ளான் என்றால்...

இறைவன் செய்த சதிதான் அது.

இறைவன் உங்களிடமிருந்து நல்லதையே சமூகத்திற்கு எதிர்பார்கின்றான்.

மாதாந்தம் தூய்மையான சம்பளம் கிடைக்கிறது ஆனாலும் உங்களுக்கு  வரும் ஒவ்வொரு பிள்ளைகளின் எதிர்காலமும் உங்களது கையில் தான் உள்ளது என மறந்து விடாதீர்கள்.

ஒரு மாணவன் வகுப்பில் இறுதி  நிலையில்  வருகின்றான் என்றால் அவர்களை ஆசிரியர்களாகிய நாம் கவனிக்காமல் விட்டு விடுவது பெறும் தவறாகும்.

அவர்களால் முடியாது  என்றில்லை அவர்களாலும் முடியும் அதற்கு நாம் தான் ஒத்துழைப்புக்களையும் ஊக்கங்களையும் வழங்க வேண்டும்.

பாடசாலை காலங்களில் ஆசிரியர்களால் கைவிடப்பட்டு, அவர்களின் திறமைக்கான வாய்ப்புக்கள் அடையாளப்படுத்தி கொடுக்காமல் போன  மாணவர்களுல் சிலர் இன்று வெளியிடங்களுக்கு சென்று அவர்களே தனக்குள்  ஒழிந்து கிடைக்கும் திறமை அடையாளம் கண்டு அவர்களின் தன்னம்பிக்கை, சுய முயற்சியால் இன்று பல சாதனைகள் படைத்து ஊர் பேசும் மொட்டுகளாக இன்று தன் பயணத்தை வெற்றிகரமான முறையில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்..

ஆனால் இதில் இன்னும் சிலர்  ஆசிரியர்களின் கவனீயத்தால் பிள்ளைகள் வீட்டினுல் முடங்கி கிடப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

எனவே ஆசிரியர்களாகிய ஒவ்வொருவரும் பிள்ளைகளின்  எதிர்கால இலட்சியத்தில் அதிக அக்கரை கொண்டு அவர்களை வழி நடாத்தி  ஒவ்வொரு மாணவர் களையும் சிறந்த புத்திஜீவிகளாக்குவது  சிறந்த ஆசானின் கடமையாகும்.

 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK