விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

கொரோனாவைத் தடுக்கும் வகையில் இலங்கை தயாரித்துள்ள புதிய மருந்து


கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக இலங்கை சுதேச மருத்துவ அமைச்சால் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆயுர்வேத திணைக்களமும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனமும் இணைந்து நோய் எதிர்ப்புப் பானத்தையும் மருந்துத் தூளையும் அறிமுகப்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகள் அனைத்தும் 100 சதவீத உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை எனவும், அவை ‘சதங்கா பனம்’ மற்றும் ‘சுவாதாரணி நோய்த்தடுப்பு பானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளன எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

"இந்த மருந்துகள் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். தற்போதைய நிலைமையில் மேற்கத்தேய மருத்துவத்தால் இன்னும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், இந்தச் சவாலைச் சமாளிக்கக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் எமது சுதேச மருத்துவ அமைச்சுக்கு உள்ளது" - என்றார்.

இந்த மருந்துகள் நேற்று நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சரினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK