நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ரிஷாட் எம்.பி


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக அவர் நீர்கொழும்பு பள்ளன்சேன சிறைச்சாலைக்கு நேற்று (19) இரவு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்கு வரும் கைதிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பள்ளன்சேன சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

அதற்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்காக அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK