பொரளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது!


பொரளையில் மூடப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர் உள்ளிட்டோருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் யாரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மினுவங்கொடை தொற்றுக்கு பின்னர் கடந்த 8 நாட்களில் கொழும்பில் 2584 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பி.சி.ஆர். பரிசோதனைகளை விஸ்தரிப்பதன் மூலம் எமது பிரதான இலக்காக இருப்பது சமூகத்தில் தொற்று பரவியுள்ளதா என்பதை இனங்காண்பதாகும்.

எனினும் இன்று புதன்கிழமை வரை கொழும்பில் 11 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை தொற்றுடன் தொடர்புடையவர்களாவர்.

புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் 215 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறும். இதுவரையில் கொழும்பில் சமூக தொற்று ஏற்படவில்லை. ஏற்படுவதற்கான அச்சுறுத்தலும் இல்லை.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை பொரளையில் சில கடைகள் மூடப்பட்டன. அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் யாரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற முடிவுகள் கிடைத்துள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK