பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவாக வாக்களித்தது இனவாதிகளுக்கு எதிரான சாட்டை மற்றும் சாவுமணி யே...


20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நேற்று

நிறைவேறிய பின்னர் இரட்டை பிரஜாவுரிமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முத்துனபின் வாக்களித்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்த நாட்டில் உள்ள சிறு குழந்தைக்கு கூட தெரியும் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சமே இரட்டைப் பிரஜாவுரிமை என்பதும், அது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ என்கின்ற ஒரு தனி மனித ஆளுமைக்காக கொண்டு வரப்பட்டது என்பது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம்.ஷிபான் தெரிவித்தார்.

இரட்டை பிரஜாவுரிமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முத்துனபின் வாக்களித்த விவகாரம் தொடர்பில் மாற்றுக்கட்சிக்காரர்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (22) மாலை மருதமுனை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அவர்,

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் இனவாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, விஜயதாச ராஜபக்ச போன்றோர் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக இருந்தாலும் இரட்டைப் பிரஜாவுரிமை என்கின்ற விடயத்தை வாக்களிப்புக்கு முன்னதாகவே பகிரங்கமாகவே எதிர்த்திருந்தனர்.

கடந்த காலங்களில் பசில் ராஜபக்ஷ அவர்களின் சிறுபான்மை இனங்கள் மீதான அதீத ஈடுபாடுகளுடன் ஈரப்பார்வையும் அவர்களுக்கான வேலைத்திட்டங்களும் பிடிக்காது போனதால் என்னவோ இனவாதிகள் பசில் ராஜபக்சவை விரும்பி இருக்கவில்லை. இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நேற்றைய சமரசத்துக்கு பின்னரே குறித்த இனவாதிகள் இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஆகவே பெரும்பான்மை இனத்துக்குள் இருக்கின்ற இனவாதிகளுக்கு சாட்டையாகவும், சாவுமணியாகவுமே முஷாரப் அவர்களின் வாக்களிப்பு இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவாக அளிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் தலைவர் ரிசாத் பதியுதீன் அவர்களின் தெரிவு அம்பாறை மாவட்டத்தில் வீண்போகவில்லை என்றே கூற வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK