நாட்டின் 51 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் மற்றும் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு பிரதிக் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.