விசேட தேவையுடையோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நல்ல பணியை வை.எம்.எம்.ஏ. ஆரம்பித்திருக்கிறது - தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி பெருமிதம்


(மினுவாங்கொடை நிருபர்)

மக்களின் இயலாத் தன்மையையும் வறுமை  நிலையையும்  கருத்திற்கொண்டு, வை.எம்.எம்.ஏ. பல வழிகளிலும் உதவி உபகாரங்களைப் புரிந்து வருகிறது. இன, மத, மொழி பேதமின்றி சகல சமூகத்தவர்களுக்கும் அவர்களின் தேவையறிந்து உடனடி நிவாரணங்களை வழங்குவதிலும் எமது பேரவை கரிசனை  காட்டிக்கொண்டிருக்கிறது. கொவிட் - 19 (கொரோனா) தொற்று ஏற்பட்டு மக்கள் அவதியுற்று அல்லல்பட்டுக்கொண்டிருந்த கால கட்டத்தில்  கூட, எமது பேரவைக்குக் கிடைத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளின் ஊடாக அவர்களுக்கு பாரிய சேவைகளைச் செய்யக் கிடைத்தமையையும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட வேண்டும்.

இன்றும்கூட வை.எம்.எம்.ஏ. பேரவை மிகச்சிறப்பான நன்மை தரும் கைங்கரியமொன்றில் இறங்கியுள்ளது. இலங்கையெங்கும் உள்ள விசேட தேவையுள்ளவர்களைத் தேடி, அவர்களுக்காக சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கும் அந்த நல்ல பணியை இறைவன் அருளால் இன்று ஆரம்பித்திருக்கின்றோம் என்ற நற்செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.  

மேற்கண்டவாறு, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி கருத்துத் தெரிவித்தார். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.  பேரவையின் ஊடாக  நாடளாவிய ரீதியில் விசேட தேவையுடையோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன, மத, மொழி  பேதமின்றி மூவின விசேட தேவையுள்ளவர்களுக்கு, வை.எம்.எம்.ஏ.  கிளைகளின் ஊடாக,  அனைத்து  மாவட்டங்களையும்  உள்ளடக்கியவாறு இவைகள் வழங்கப்பட்டு வருகின்றன . ஆயிரம் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்   இச்செயற்திட்டத்தை, பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி,  தேசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான தவிசாளர் கே.என். டீன்  வழிகாட்டலில், கொழும்பிலுள்ள 
தலைமையகத்திலிருந்து ஆரம்பித்து வைத்தார். இதன்போதே தேசியத் தலைவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இந்நிகழ்வில், தேசிய பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாபிர் சவாத், தேசிய பொதுப்பொருளாளர் இஹ்சான் ஹமீத் உள்ளிட்ட  மாவட்டப் பணிப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK