மாளிகைக்காடு மையவாடி சுவரை காப்பாற்றும் பணியில் ஹரீஸ் எம்.பி : இராஜாங்க அமைச்சரையும் பணிப்பாளர் நாயகத்தையும் அமைச்சில் சந்தித்து பேசினார்.

 நூருல் ஹுதா உமர்

மாளிகைக்காடு கிழக்கு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழும் நிலையில் உள்ளதை அன்மையில் களத்திற்கு சென்று பார்வையிட்டதுடன்  மட்டுமில்லாது காரைதீவு பிரதேச செயலாளருக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

அந்த விடயம் சம்பந்தமாக தன்னால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்த அவர்,

ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்களின் நிலையின் மோசத்தை நேரடியாக சென்று பார்வையிட்டு அறிந்த நான் கடலரிப்பின் மூலம் ஜனாஸாக்கள் வெளிவர ஆரம்பிக்கும் நிலையை உணர்ந்து நகர அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கோடயக்கோட மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோரை கடந்த புதன்கிழமை அமைச்சில் சந்தித்து பிரதேச மக்களினால் மணமூட்டைகள் அடுக்கப்பட்டு குறித்த மதில்கள் தற்காலியமாக பாதுகாக்கப்பட்டாலும் கடலரிப்பு உச்சநிலையில் இருப்பதால் சுவர் இடிந்துவிழும் நிலையிலையே உள்ளது. சுவர் இடிந்து வீழ்வதனால் ஜனாஸாக்கள் வெளியாகும் நிலை உள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதை விளக்கினேன்.

அத்துடன் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்களின் நிலையை அறிந்து அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சரும், பணிப்பாளர் நாயகமும் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க குறித்த துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை கொண்டு துரித கதியில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நம்பிக்கை தெரிவித்தார். 





BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK