மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி கிராமங்களுக்கு


மக்கள் முகங்கொடுக்கின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாக கண்டு அவர்களின் குறைகளை கேட்டறிய ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முதல் விஜயமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு ஹப்புத்தளை 100 ஏக்கர் கிராமத்தில், குமாரதென்ன பாடசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முடியுமான வகையில் உடனடியாக தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் எனவும் தீர்ப்பதற்கு காலம் எடுக்கக்கூடிய பிரச்சினைகள் மாத்திரம் பின்னர் தீர்த்து வைப்பதற்காக குறித்துக்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK