நான் ஒரு துவேசியல்ல - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, September 9, 2020

நான் ஒரு துவேசியல்ல

 அப்துல் அஸிஸ் (நளீமி)
நான் ஒரு முஸ்லிம். எனது கொள்கை இஸ்லாம். இன மத பிரதேச வாதம் என்னிடம் இல்லை. நான் ஏற்றுக்கொண்ட இஸ்லாம் மார்க்கம் என்னை ஒருபோதும் இனத்து வேசியாக மாற்றாது.

 அல்குர்ஆன் அல்ஹதீஸ் வழிகாட்டலில் வாழ்கின்றவன் நான். இவ்விரு வழிகாட்டியும் என்னை குறுகிய சிந்தனை உள்ளவனாக ஒரு போதும் உருவாக்காது.

சர்வ லோகத்தையும் படைத்தவனின் மார்க்கத்தை சுமந்தவன். சர்வலோக அருட்கொடை முஹம்மதின் கொள்கையை வாழ்வின் அச்சாணியாக எடுத்து நடப்பவன்.

எனவே குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மாத்திரம் பணிபுரிய இவ்வுலகுக்கு நான் அனுப்பப்படவில்லை. முழு மனித சமுதாயத்துக்கும் வாழ்வு கொடுக்க வந்தவன்.

யாரும் எப்படியும் வாழலாம் ஆனால் நான் முஸ்லிம் என்பதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளேன். நான் நினைத்தபடி வாழ முடியாது. அல்லாஹ்வும் நபிகள் முஹம்மத் (ஸல்) சொன்னபடி மட்டும்தான் வாழ முடியும்.

இனத்துவேசியாக வாழ் என்றால் எப்படி முடியும்?No comments:

Post a Comment