உலகத்தின் உச்சகட்ட கவனத்தில் இலங்கை

அப்துல் அஸீஸ் (நளீமி)

இன்று இலங்கை நாடு உலக மக்களின் கவனத்தின் உச்சத்தில் இருக்கிறது.
"உயிர்களுக்கு இன்னா செய்யாமை" என்ற புத்த பெருமானின் கொள்கையை ஏற்றுக்கொண்ட மக்கள் வாழும் நாட்டில் மனிதர்களுக்கு மட்டும் பெறுமதி இல்லை என்று நினைக்கும் அளவு அண்மைக்கால பிரச்சினைகள் அனைவரையும் சிந்திக்க வைத்தன.

மாடு அறுப்பது மாபெரும் குற்றம் என்று நினைக்கும் இன்றைய அரசாங்கம் ஏன் முஸ்லீம்களின் ஜனாஸாவை தீயிட்டுக் கொளுத்தியது என்று உலகமே சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கை இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஏப்பம் இட்டுக்கொண்டு விசித்திரமான சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் அமுல்படுத்த முடிவெடுத்துள்ளது.
பாராளுமன்றம் சென்றி ருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்தை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள்? எப்படி கையாள்வார்கள்? என்று ஆவலுடனும் அவதானத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
சாணக்கியமாக எல்லாவற்றையும் அணுக வேண்டும் என்று விரும்புகின்ற முன்னால் முஸ்லிம் அமைச்சர்கள் இந்தப் பிரச்சினையை சரியான முறையில் அணுகி சிறந்ததொரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

படைத்த இறைவனின் அனுமதிக்கு எதிரான இந்த சட்டம் தோல்வியடையும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. ஆனால் உணர்ச்சிவசப்படாமல் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் வீர கோசங்கள் இல்லாமல் இந்த சட்டத்தை எப்படி இல்லாமல் செய்வது? இதுதான் இன்றைய கேள்வி.
தீமைகளை தட்டிக்கேட்க நல்லதொரு எதிர்க் கட்சி தேவை என்று எதிர்க்கட்சி ஒன்றை திட்டமிட்டு உருவாக்கி இருக்கின்றோம்.

இப்பொழுது ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து அதன் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் சிறுபான்மை சமூகத்தின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி இதனை கையாளுகின்றார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றோம்.

சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் சஜித் அவர்கள் அழகிய தீர்வை எமக்கு பெற்றுத் தருவார்கள் என்று நம்பி அவர்களின் கொள்கையை ஆதரித்து கடந்த தேர்தலில் மா பெரும் வெற்றியை சிறுபான்மை சமூகம் கொடுத்தது.
பெரும்பான்மை சமூகத்தால் தோல்வியைத் தழுவினாலும் சிறுபான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் இதற்கு அழகிய தீர்வைத் தருவார் என்று நம்புகின்றோம்.

இயற்கைக்கு எதிரான இந்த சட்டம் இறைவனுக்கு எதிரான இந்த போராட்டம் தோல்வி அடையும் என்பதில் உறுதியாக நம்புகின்ற நாம் இன்றைய காலகட்டத்தில் மிகக் கவனமாக இதனை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான கட்டத்தில் இருக்கிறோம்.

நாம் ஆதரித்த பெரும்பான்மை சமூகம் சார்ந்த தலைவர்கள காய் நகர்த்த வேண்டிய ஒரு பிரச்சினை இது.
முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதோர் மாட்டிறைச்சியை விரும்பிச் சாப்பிடுகின்ற காலமிது. எனவே மாட்டிறைச்சி இன்று எல்லோராலும் வரவேற்கப்பட்ட ஒரு உணவு. இதைத் தடை செய்தால் நாம் அனைவரும் புத்த பெருமானின் கொள்கையை இலங்கைத் திருநாட்டில் அமுல் படுத்தும் படி கோஷம் எழுப்புவோம்.

கோழி, ஆடு, பன்றி போன்ற எல்லா உயிரினங்களையும் அறுக்க வேண்டாம் என்ற கொள்கையை முஸ்லீம்கள் கடைப்பிடித்து இந்நாட்டு பெரும்பான்மை மக்களை உயிரிலும் மேலாக மதித்து ஜனாதிபதி அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கொள்கைக்கு பூரண ஆதரவை வழங்குவோம்.
மனிதர்களை கொலை செய்வது சாதாரண குற்றம் ஜனாசாவை எரிப்பது மிக சாதாரண விடயம். ஆனால் மாட்டை அறுப்பதுதான் மாபெரும் குற்றம்.
இதுதான் இன்றைய ஜனநாயகம்.

முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் பொறுமை காப்போம். போராடாமல் இருப்போம். நாம் தெரிவு செய்த தலைவர்களின் கடமை இது
நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததோடு நமது கடமை முடிந்துவிட்டது.
நல்லதொரு தீர்வை நாம் தெரிவுசெய்த நாடாளுமன்ற தலைவர்கள் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK