த ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் ஸாக்கி ஜப்பார் இன்று (09) கொழும்பு – பெலவத்தயில் உள்ள அவரது வீட்டில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தனியாக வசித்து வந்த இவர் கடந்த ஒரு வாரமாக பணிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உறவினர் ஒருவர் ஜப்பாரின் வீட்டிற்கு இன்று சென்ற போதே அவர் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் உயிரிழந்து சில நாட்கள் ஆகி இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .