நாடாளுமன்ற வீதியின் பொல்துவ பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொரளை - கொட்டாவ வீதியின் தியத உயனவுக்கு முன்னாள் உள்ள பொல்துவ பாலத்தின் கீழ் இந்த சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித் நபர் நீரில் விழுந்த நிலையில் அடித்து செல்லப்பட்டாரா அல்லது கொலையா என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.