வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்களான வட.மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் குலசிங்கம் திலீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (21) நடைபெற்றது

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட்  பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கே.கே.மஸ்தான், மற்றும்  பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,  மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்