இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து இன்று வீடு திரும்பவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த அனைவரும் வெளியேற்றப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.