பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40 ஆயிரம் மாணவர்கள் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 0718885769

Wednesday, September 30, 2020

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40 ஆயிரம் மாணவர்கள்


இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவது சம்பந்தமான 36 தகுதிகாண் பரீட்சை முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

அதேவேளை 2019ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் 40 ஆயிரம் மாணவ, மாணவிகளை பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் மேலதிக சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

மருத்துவம், பொறியியல் போன்ற சில பட்டப்படிப்புகளுக்கு, இம்முறை சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment