பிராந்திய ஆளுமைகளின் பெருந்தேசிய பிரவேசம் பூகோள, ஆள்புல அடையாளத்துக்கு ஆபத்தா?

சுஐப் எம்.காசிம் -

புதிய பாராளுமன்றத்துக்கு 63 புதிய முகங்கள் தெரிவாகியுள்ள நிலையில்வடக்குகிழக்கு உட்பட முன்னாள் முதலமைச்சர்களின் வருகைகள்பிராந்திய அதிகாரம்அதன் ஆளுமை பற்றிய ஐயத்தை தோற்றுவித்துள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமைகள் அர்த்தமற்றுப் போயுள்ளதாஅல்லது கட்டுங்கடங்காத அரசியல் ஆசைகளாஇவர்களை இத்தேர்தலில் குதிக்க வைத்துள்ளது. இவற்றைத்தான் முன்னாள் முதலமைச்சர்களின் வருகைகள் சிந்திக்கவைக்கின்றன. சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பகிர்வுக்கான முதற்கட்ட முயற்சிகளே இந்த மாகாண சபை முறைகள். இதற்கு முன்னர் மாவட்ட அபிவிருத்தி சபைகள் பற்றிப் பேசப்பட்டாலும்அவை நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. இந்தக் குறுகிய நிலப்பரப்புக்குள் தெரிவாகும் மாவட்ட எம்.பிக்களாக வருவதற்குஇந்த முதலமைச்சர்கள் ஆசைப்பட்டுள்ளார்களே!

ஆகக்குறைந்ததுநான்கு முதல் 21 எம்.பிக்களைத் தெரிவுசெய்யும் மாவட்டங்களிலிருந்தே எம்.பிக்கள் தெரிவாகின்றனர். இதனை விடவும் இரண்டு மாவட்டங்கள் முதல் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கும் மாகாண சபைகளின் முதலமைச்சர் பதவி இவர்களுக்கு விருப்பமற்றுப்போனது ஏன்அதுவும் வடக்குகிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்களும் அடையாள அரசியலின் எல்லைக்குள்ளிருந்து வௌியேறியுள்ளனரே ஏன்மத்திய அரசின் மையப்புள்ளிக்கு வர விருப்பமுற்றுள்ள இவர்கள்சிறுபான்மை அரசியல் தீர்வுக்கு சொல்ல விழையும் செய்திகள் என்னஆளுநர்கள் உள்ள வரை சுதந்திரமாகச் செயற்பட முடியாதென்பதாஅல்லது மத்திய அரசின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாகாண சபைகள் உள்ளதென்பதாகாணிபொலிஸ்நிதிசர்வதேச உறவுக்கான அதிகாரங்கள் இல்லாத மாகாண சபைகளால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அந்தஸ்துக்களை அடையாளப்படுத்த முடியாதென்பதா?

உண்மையில் சமஷ்டிக்கு நிகரான அதிகார அலகு கோரும் தமிழ் பேசும் அரசியல்இந்த மாகாண சபையில் திருப்தியில்லை என்பதையே வௌிப்படுத்தி வருகின்றது. பிரிக்கப்படாத இலங்கைக்குள் தங்களைத் தாங்களே ஆளும் சமஷ்டி என்பதைத்தான் மாகாண சபைகள் பிரதிபலிக்க வேண்டும். இல்லாவிடின்சிலர் பிரதிநிதிகளாக சுகங்களை அனுபவிக்கும் சபையாகவே இது இருக்கும். இவ்வளவு காலமாக இவ்வாறுதான் இவை செயற்படுகின்றன. இதனால்தான் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாள் தன்னிச்சையாக ஈழப் பிரகடனம் செய்துவிட்டு ஓடினாரோ தெரியாது. அவ்வாறானால்இந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழர் தரப்பு நிராகரிக்க வேண்டியதுதானே! ஏன் போட்டியிடுகின்றனபோட்டியிடாவிட்டால் உதிரிக்கட்சிகள் வாய்ப்புக்களை பயன்படுத்திதமிழர்களின் ஏகபிரதிநிதிகளாகக் காட்டலாம்.

இணைந்த வடகிழக்கு மாகாண சபைக்கு 1988 இல் நடத்தப்பட்ட தேர்தலில் தமிழர்களின் ஏக தலைமை போட்டியிடவில்லை. இதனால் போராட்டக் குழு ஒன்று அந்தச் சபையை கோலோச்சியது மட்டுமன்றிஇனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ‘மாகாண சபை முறைமைதான்’ என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் நியாயப்படுத்தியது. ஆளுநரின் நேரடிக்கட்டுப்பாட்டிலுள்ள மற்றும் காணிபொலிஸ்நிதிசர்வதேசத் தொடர்புகள் இல்லாத மாகாண சபைகள் சிறுபான்மை அரசியலுக்கான கடிவாளமாகக் கருதித்தான்மாகாண சபைகளைக் கண்டுகொள்ளாமல் காலங்கடத்த நேர்ந்ததுதமிழரின் ஏக தலைமைக்கு.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாமல் இருந்த சந்தர்ப்பத்தைஇவ்வாறு சில கட்சிகள் பயன்படுத்தியிருந்தன. இதனால் ஏற்பட்ட பாரதூரங்களின் பின்னரேதமிழரின் ஏக பிரதிநிதிகள் இந்தத் தேர்தல்களில் பங்கெடுக்கின்றனர் .அது மாத்திரமல்ல, ‘தலைமைக்குப் பின்னால் தமிழர்கள் உள்ளனர்’ என்பதைக் காட்டும் இராஜதந்திரமும் இதற்குள் உள்ளன.

முஸ்லிம்களை ஒரு பொருட்டாகக் கருதாத இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாகாண சபைத் தேர்தலில், 1988 ஆம் ஆண்டு போட்டியிடாமல் இருக்கவே ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் விரும்பியது. ஆனால், ‘முஸ்லிம்கள் அனைவரும் எமக்குப் பின்னால்’ என்ற ஆணையை அரங்கேற்றத்தான் அப்போது போட்டியில் குதித்தது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ். இவ்வாறு பல அர்த்தங்கள்அடையாளங்கள் பொதிந்துள்ள மாகாண சபைகளின் முதலமைச்சர்கள்இம்முறை தேசிய அரசியலுக்குள் நுழைந்தமை வேறு ஏதும் சுழியோடலுக்கோ தெரியாது.

மாகாண சபை முறைகளால் ஏற்கனவே அடைந்துள்ள சிறுபான்மையின அடையாள அதிகாரத்தின் கொள்ளளவுகள் போதாது என்பதற்காகபூகோளதாயக அரசியலை புறந்தள்ள முடியாது. “முட்டியில் உள்ள தண்ணீர் போதாது என்பதற்காகமுட்டியை உடைப்பது அறிவுடமையாகாது”. உள்ளதை விடப் பெரியதை வாங்குவதுதானே பொருத்தமானது. முன்னாள் முதலமைச்சர்களின் முடிவுகளும் இவ்வாறுதான் உள்ளன. வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் ஹாபிஸ் நஸீர் ஆகியோருடன்ஊவா மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷதென்மாகாண முன்னாள் முதலமைச்சர் சான்விஜலால் டி சில்வா உட்பட பதினொரு பேர் வரையில் பாாளுமன்றம் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை முதலமைச்சர்கள் விடயத்தில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. இது புதிதும் அல்ல. தேவையிருந்தால்தானே பெறுமதி விளங்கும். அதிகாரங்களைக் குறிவைத்து குதிக்கும் சபைகளாகவே இவை உள்ளன. இங்கிருந்து வளர்ந்த சந்திரிக்காசுசில் பிரேமஜயந்தபிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தேசிய அரசியல் பிரவேசமும் இதையே வெளிப்படுத்துகின்றது. மொழிக்காக மட்டும் அதிகாரங்களைஆள்புலங்களைக் கூறுபோடுவது விடுதலைப் போரோட்டத்தை நியாயப்படுத்தும் என்பதற்காகத்தானேதென்னிலங்கைக்கும் இச்சபைகள் வழங்கப்பட்டன. எனவேதமிழ் பேசுவோரின் தாயகப்பகுதி அடையாள அரசியல்ஏன் தனித்துவமிழந்து பெருந் தேசியத்துக்குள் தலைகாட்ட வேண்டும்இந்நிலைமைகள் காலப்போக்கில் இந்த முறைகளையும் இல்லாமல் செய்யலாமோஎன்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. மாகாண சபை முறைமைகளை ஒழிக்கப் புறப்பட்ட சரத் வீரசேகரவுக்குகொழும்பில் அதிகபட்ச வாக்குகள் கிடைக்கப் பெற்றமையேஇந்த சிந்தனைக்கு வலுச்சேர்க்கின்றது.

மேலும்விக்னேஸ்வரன்சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் அடையாள அரசியல் சர்வதேசத்தாலும் கூர்ந்து அவதானிக்கப்பட்டவை. கிழக்கில் தமிழரின் இனச்செறிவை பறைசாற்றும் வகையில்தான் சந்திரகாந்தனின் தெரிவு இருந்ததை நாம் மறப்பதற்கில்லை. அதேபோன்றுநந்திக்கடல் விவகாரம் உள்ளிட்ட பல தீர்மானங்களை மாகாண சபையில் துணிந்து நிறைவேற்றிய விக்னேஸ்வரன்தமிழரின் பிராந்திய தலைமைக்கு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்ததையும் நாம் மட்டுமல்லசர்வதேசமும் மறக்க முடியாது.

இவ்வாறான பிராந்திய ஆளுமைகள் பெருந்தேசிய அரசியலுக்குள் வந்து கலந்துவிடுவதுசிறுபான்மையினரின் பூகோளஆள்புல அரசியலின் தனிச்சிறப்பை மழுங்கடிக்கலாம். “கிழக்கு முதலீட்டுத் திட்டம்” என்று தொடங்கிய ஹாபிஸ் நஸீரின் பொருளாதாரப் புரட்சிகிழக்கிலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தொழில்வாய்ப்புக்களை தேடிவந்ததையும் இன்று சிலர் ஏய்ப்புடன் நோக்குகின்றனர். இனி இத்திட்டத்தை யார் கொண்டு வருவார் என்பதே அது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK