ஹஸ்பர் ஏ ஹலீம்-

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு இம் முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இம்ரான் மஹ்ரூப் அவர்களுக்கு மக்கள் பெரும் உற்சாக வரவேற்பளித்தார்கள்.

வீதி வழியாக வாகன ஊர்வலம் நேற்று (15)கிண்ணியா பகுதியில் இடம் பெற்றது.இதன் போது பெரிய கிண்ணியா, பெரியாற்று முனை உள்ளிட்ட கிண்ணியா நகர சபை பகுதி ஊடான வாகன பேரணியின் மூலமாக மக்கள் அவரை வரவேற்பளித்தார்கள்.

மாலை அணிவித்தும் பலர் இதன் போது வரவேற்பளித்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தனக்கு வாக்களித்த மக்களுக்காக நன்றிகளையும் இதன் போது குறித்த எம்.பி இம்ரான் மஹரூப் மக்களிடம் தெரிவித்தார்.

பல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.