முன்னாள் அமைச்சர்  மற்றும் மருந்தாக்கல் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் பொய்யான சாட்சிகள் சகிதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒகஸ்ட் 28ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே ராஜித சேனாரத்னவும் ரூமி மொஹமெட்டும் நீதிமன்றால் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.