ஷாகுல் ஹமீத் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் இலங்கை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் எம்.பி. அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :
நடைபெற்று முடிந்துள்ள இலங்கை பொதுத் தேர்தலில் தாங்கள் கண்டி மாவட்ட தொகுதியிலிருந்து மக்கள் பிரதிநிதியாக சிறப்பான வெற்றி பெற்றமைக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். 
இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கி இலங்கையிலுள்ள தமிழர்கள், முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேர்தல்  களத்தில் தாங்கள் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது. இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தமிழ் & முஸ்லிம் சமூகங்களின் 46 மக்கள் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து தாங்களும், அம்பாறையிலிருந்து ஹெச்.எம்.எம். ஹரீஸ், பைஸல் காசிம் ஆகியோரும், மட்டக் களப்பிலிருந்து ஹாபிஸ் நசீர் அஹமது, திருகோணமலை மாவட்டத்திலிருந்து எம்.எஸ். தௌபீக் ஆகியோர் வெற்றி பெற்றதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய சரித்திரம் படைப்பர்; இந்திய & இலங்கை நட்புறவிற்கு பாலமாக இருப்பர்; இலங்கை புதிய அரசில் தங்களின் பங்கும், பணிகளும் இருக்க வேண்டுமென நான் வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி! இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.