அனுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் அதிகூடிய வாக்குகளை பெற்று முதலிடத்தை பெற்ற இஷாக் ரஹுமானின்  எதிர்கால அரசியல் செயல்பாடுகள் பற்றி போலியான வதந்திகளை ஒருசில விஷமிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் முழுமையாக நிராரித்துள்ளார்  இவற்றில்  எதுவிதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை Flash News இணைய தளத்துக்கு தெரிவித்துள்ளார்.  சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு எதிர்தரப்பினருடன்  இணைந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்களித்த மக்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றும் கட்சிக்கும்  தலைமைக்கும் ஒரு போதும் துரோகம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார்