வாக்கெண்ணும் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றையதினம் மாலை காலி, அம்பலங்கொட சவுத்லேண்ட்ஸ் கல்லூரியில் உள்ள வாக்கெண்ணும் எண்ணும் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற வான் ரக வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. 

வாக்கு மீது வாக்குப் பெட்டிகளுடன் பிராதான வீதியால் பயணித்த வாகனத்தின் மீது குறுக்கு வீதியொன்றினால் பயணித்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் மோதியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயங்களுடன் காலி, பலாபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வானில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லையெனவும், வாக்குப்பெட்டிகள் உரிய காலப்பகுதியில் வாக்கெண்ணும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது