உலகில் கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு அழைத்து வந்த உலகின் முதல் நாடாக இலங்கை திகழ்கிறது என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் UNICEF தெரித்துள்ளது.
இலங்கையில் உள்ள யுனிசெப் பிரதிநிதி இந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.அத்துடன் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற இடம் பாடசாலையென அவர் தெரிவித்தார்.அதனால், பாடசாலைகளை திறப்பது அத்தியவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரோனாவின் ஆபத்து நீடிப்பதால், அனைத்து பாடசாலை மாணவர்களும் தங்கள் ஆபத்தை குறைக்க அத்தியாவசிய முறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல பாடசாலை மாணவர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்