முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் கண்டியில் இன்று இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.