நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான முடிவுகள் இதோ; 3-ல் இரண்டு பெரும்பான்மையை பெற தவிறிய மொட்டு! - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Thursday, August 6, 2020

நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான முடிவுகள் இதோ; 3-ல் இரண்டு பெரும்பான்மையை பெற தவிறிய மொட்டு!

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 (6,853,693) வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 59.09 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் 5 ஆசனங்களே தேவைப்படுகின்ற நிலையில், ஆதரவுக் கட்சிகளுடன் இணைந்து இந்த பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இரண்டாம் நிலையிலுள்ள தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி 27 இலட்சத்து 71ஆயிரத்து 984 வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இது மொத்த வாக்குகளில் 23.90 வீதமாகும்.
இதேவேளை, இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக மூன்று இலட்சத்து, 27ஆயிரத்து 168 வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி பெற்ற வாக்களிப்பு வீதம் 2.82ஆகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், திசைகாட்டி சின்னத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலில் 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இக்கட்சி, மொத்தமாக நான்கு இலட்சத்து 45 ஆயிரத்து 958 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் இது மொத்த வாக்குகளில் 3.84 வீதமாகும்.
இதேவேளை, வரலாற்று தோல்வியைச் சந்தித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை ஒரேயொரு ஆசனத்தை மட்டும் பெற்றுள்ளது. இக்கட்சி மொத்தமாக இரண்டு இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு ஆசனமும் போனஸ் ஆசனமாகவே கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைவிட, இம்முறை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இக்கட்சிக்கு 67ஆயிரத்து 766 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இரண்டு ஆசனங்களில் ஒரு ஆசனம் போனஸ் ஆசனமாக கிடைத்துள்ளது.
மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இம்முறை தேர்தலில் 2 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இக்கட்சி மொத்தமாக 61ஆயிரத்து 464 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, விடுதலைப் புலிகள் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிஸ், எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்று இலங்கை நாடாளுமன்றின் 225 ஆசனங்களை நிரப்புகின்றன.

No comments:

Post a Comment