நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியின் 10 பிரதிநிதிகள்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான சிறந்த எதிர்காலத்திற்காக தொழிற்பண்பட்டவர்கள் (வியத் மக) அமைப்பினை சேர்ந்த 8 பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இவர்கள் போட்டியிட்டனர். அத்துடன் அந்த அமைப்பை சேர்ந்த மேலும் இருவர் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் மாவட்ட ரீதியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வியத் மக அமைப்பின் உறுப்பினர்களின் விபரம்.

கொழும்பு - சரத் வீரசேகர

கம்பஹா - கலாநிதி நாலக கொடஹேவா

மாத்தளை - நாலக கோட்டேகொட

அனுராதபுரம் - போராசிரியர் சன்ன ஜயசுமன

குருணாகல் - பேராசிரியர் குணபால ரத்னசேகர

கண்டி - சட்டத்தரணி உதயன கிரிந்திகொட

ஹம்பாந்தோட்ட - மருத்துவர் உபுல் கலப்பத்தி

திகாமடுல்ல( அம்பாறை) - திலக் ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வியத் மக அமைப்பை சேர்ந்த அஜித் நிவாட் கப்ரால், சீதா அரம்பேபொல ஆகியோர் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வியத் மக அமைப்பு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச தன்னை வியத் மக அமைப்பின் உறுப்பினர் என்றே கூறிக்கொண்டதுடன் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பின்னர், பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் வியத் மக அமைப்பை சேர்ந்த தலா இரண்டு பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என அந்த அமைப்பு கூறி வந்தது. எனினும் ஒன்பது பேருக்கு மாத்திரமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வியத் மக அமைப்பை சேர்ந்த அனுர பெர்ணான்டோ தோல்வியடைந்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK