ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வது உறுதி! அறிவிக்க தயாராகும் கட்சி - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, August 9, 2020

ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வது உறுதி! அறிவிக்க தயாராகும் கட்சி

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது என எங்கள் மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு ஞானசார தேரரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய அனுமதியை வழங்கியதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் ஊடக செயலாளர் எரந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க உள்ளனர்.
இந்த நிலையில் ஞானசார தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சி 67 ஆயிரத்து 758 வாக்குகளை பெற்று தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment