கட்சி தாவல்கள் ஆரம்பம் - எதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு செல்லும் 10 பேர் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Saturday, August 8, 2020

கட்சி தாவல்கள் ஆரம்பம் - எதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு செல்லும் 10 பேர்

பொதுத் தேர்தலில் சமகால அரசாங்கம் அமோக வெற்றி பெற்ற நிலையில் புதிய அமைச்சரவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிரணியில் இருந்து 10 உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துதிய 4 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மலையக கட்சி ஒன்றில் இருவரும், கிழக்கில் சிறிய கட்சி ஒன்றில் இருவரும் வட மத்திய மாகாணத்தில் ஒருவரும் இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிய வருகிறது.
அவர்கள் தற்போது வரையிலும் அரசாங்கத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அவர்களுக்கு அமைச்சு வழங்குவதற்கு எவ்வித வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment