ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ இன்று சத்தியப்பிரமாணம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Saturday, August 8, 2020

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ இன்று சத்தியப்பிரமாணம்

இலங்கையின் 14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இதுதொடர்பான நிகழ்லு தற்போது களனி ரஜமஹா விஹாரையில் நடைபெறுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் திரு மஹிந்த ராஜபக்ஷ இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ 1970ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவாகி முதற் தடவையாக பாராளுமன்றதில் பிரவேசித்தார்.
1947 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரதமர் பதவி உருவாக்கப்பட்டபின்னர் 14வது பிரதமர் என்ற ரீதியில் இன்று அவர் நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்கிறார்.
தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற உறுப்பினரராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் மஹிந்த ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார். முதல் தடவையாக 2004ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார். கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு. மஹிந்த ராஜபக்ஸ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று அமோ வெற்றி பெற்றார்.இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகள் இதுவாகும்.
இரண்டு தடவைகள்; ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  2005, 2010ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் போட் டியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார். 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி தொடக்கம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதிவரை முதல் முறையாக இலங்கையின் பிரதமராக செயற்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், அவ்வாண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதிவரை பிரதமராகவும் செயற்பட்டிருந்தார். 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமராக திரு.மஹிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார்.

இம் முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற உறுப்பினர்களும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்றைய சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர், திரு.மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள் பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமையைப் பெறுவார்.

No comments:

Post a Comment