ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக வடிகமங்காவ வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் - புத்தளம் பிரதான வீதியில் பாதனிய பகுதியில் இன்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் பயணித்த சிற்றூர்தி பாரவூர்தியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்துள்ள 68 வயதான அசோக வடிகமங்காவ இந்த முறை பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது