யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை நீதவான் காயத்ரி சயலவன் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்திய போதே, பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.